கோவையில் காதல் திருமணம் செய்த பெண் கணவரின் கண் எதிரே கடத்தல் - போலீசார் விசாரணை!

கோவை: கோவையில் காதல் திருமணம் செய்த பெண், கணவரின் கண் எதிரே காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் காதல் திருமணம் செய்த பெண், கணவரின் கண் எதிரே காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் விக்னேஸ்வரன் (26). இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா இப்பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகள் மதுமிதாவுக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி கோவை பேரூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர், காதல் ஜோடி விக்னேஸ்வரன் மற்றும் மதுமிதா ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் நிலையத்திற்குச் சென்று தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மதுமிதாவின் பெற்றோரை அழைத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மதுமிதாவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. மேலும், மதுமிதாவும் தனது கணவருடன் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டு செல்கிறேன் என்று கூறினார்.

இதனையடுத்து, மதுமிதாவின் பெற்றோர் வீட்டில் இருந்து மதுமிதா எடுத்துச் சென்ற தங்க நகைகளை ஒப்படைத்து செல்லட்டும் என்று கூறினர். பின்னர், மதுமிதா வீட்டை விட்டு வெளியேறிய போது எடுத்து வந்த நகைகளை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். இதையடுத்து இரு தரப்பினரும் போலீசில் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றனர்.

தொடர்ந்து, விக்னேஸ்வரன் தனது மனைவி மதுமிதாவை அழைத்துக் கொண்டு கோவை வெள்ளலூர் பகுதியில் வந்து தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று விக்னேஸ்வரனும் அவரது மனைவி மதுமிதாவும் ஒரு பகுதியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று விக்னேஸ்வரன் சென்ற பைக்கை வழிமறித்தது. காரிலிருந்து இறங்கிய மதுமிதாவின் தந்தை பாண்டியராஜன் மற்றும் மதுமிதாவின் அம்மா மஞ்சுளா ஆகியோர் பைக்கில் சென்று கொண்டிருந்த மதுமிதாவை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து காரில் ஏற்றி அங்கிருந்து வேகமாக சென்றனர். இதை சற்றும் எதிர்பாராத விக்னேஷ்வரன் அதிர்ச்சியில் சத்தம்போட்டார். அதற்குள் அங்கிருந்து கார் வேகமாக சென்றது.

பின்னர், இதுகுறித்து விக்னேஷ்வரன் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த பெண்ணை கணவர் கண்ணெதிரேயே காரில் கடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...