கோவை: ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி டோஸ் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கோவை: வரும் ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வரவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. ஆனால், தடுப்பூசி தட்டுப்பாட்டின் காரணமாக சென்னையின் பல முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
அதேசசமயம், மக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்துவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால், தடுப்பூசி இல்லாமல் மக்கள் திரும்பிச் செல்வது வேதனை அளிப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை அறிந்த மத்திய அரசு, 2 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. இன்று மாலை 5 மணிக்கு அவை சென்னை வந்தன. அந்த தடுப்பூசிகள் ஒருநாள் தேவைக்கே போதுமானதாக இருக்காது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி தருவதாக மத்திய அரசு கூறியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 1.44 கோடி கொரோனா தடுப்பூசி பெறப்பட்டு, 1.41 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.