கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலால் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 45 நாட்களில் 75 கோடி ரூபாய் மதிப்புள்ள 160 கிலோ தங்க நகைகள் அடமானம் மற்றும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பு தொழிலிலும் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் சராசரியாக 200 கிலோ எடையிலான தங்கம் சுமார் 100 கோடி மதிப்பில் வணிகம் கோவை மாவட்டத்தில் நடைபெறுவது வழக்கம்.
நோய்த்தொற்று பரவல் காரணமாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு கடந்த மே 10 முதல் அமல்படுத்தப்பட்டது. 45 நாட்களுக்கு பின் தற்போது சில தளர்வுகள் கோவை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் தற்போது நகை தயாரிப்பு மட்டுமே துவங்கியுள்ளது. விற்பனை அடுத்த வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நோய் தொற்று பரவல் அனைத்து தரப்பினருக்கும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிக நிதி நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்களிடமுள்ள தங்க நகைகளை அடமானம் மற்றும் விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது,

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மே 10 முதல் ஜூன் 25 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 75 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 160 கிலோ எடையிலான தங்க நகைகள் அடமானம் மற்றும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவல் மற்ற துறைகளில் ஏற்படுத்திய தாக்கத்தை போன்றே தங்க நகை தயாரிப்பு மற்றும் விற்பனை தொழிலிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் தொற்று பரவல் முதல் அலை தொடர்ந்து தினசரி விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது.
அதில் இருந்து மீண்டு வருவதற்குள் நோய் தொற்று பாதிப்பு இரண்டாவது அலை மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் இத்தொழில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அரசு தளர்வுகள் அளித்துள்ளதை தொடர்ந்து ஆன்லைன் முறையில் சங்க உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் கலந்துரையாடி அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும், இன்று முதல் நகை தயாரிப்பு துவக்கி உள்ளோம். இருப்பினும் நகை விற்பனை அடுத்த வாரம் முதல் மட்டுமே துவங்கும். நிதி நெருக்கடியில் இருந்து மீண்ட பின் அடமானம் வைத்த தங்க நகைகளை மக்கள் மீட்க துவங்குவர். தவிர நகைகளை நெருக்கடியால் விற்பனை செய்த மக்கள் புதிதாக நகைகளை வாங்க ஆர்வம் காட்ட துவங்குவார்கள். எனவே, எதிர்வரும் காலம் அனைவருக்கும் நெருக்கடியில் இருந்து மீண்டு வர உதவும் வகையில் ஒரு நல்ல காலமாக அமையும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.