கோவை: தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் கிணத்துக்கடவு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நடத்திய சோதனையில் 16 லிட்டர் ‘கள்' பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.

கிணத்துக்கடவு அருகே தமிழக - கேரளா எல்லைப் பகுதியான கோவிந்தநாயக்கனூர் பகுதியில் கிணத்துக்கடவு காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபரை சோதனையிட்ட போது அதில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 லிட்டர் ‘கள்' இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்தபோது அந்த வாலிபரின் பெயர் ரவீந்திரன் வயது (18) என்பதும், பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதேபோல், காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து முத்தூர் பகுதியில் தனியார் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல் துறையினர் சட்ட விரோதமாக தென்னை மரங்களில் பானை கட்டி ‘கள்' இறக்கியது தெரியவந்தது. பின்னர், 6 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்த போலீஸார் அங்கிருந்த ஞானபிரகாஷ்(40) என்பவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.