பொள்ளாச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் நூதன போராட்டம்..!

கோவை: பொள்ளாச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து BSNL அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி சார்பில், இருசக்கர வாகனத்தை கயிறு மூலம் இழுத்து நூதன போராட்டம் நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து BSNL அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி சார்பில், இருசக்கர வாகனத்தை கயிறு மூலம் இழுத்து நூதன போராட்டம் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோலின் விலை 100 ரூபாயும், டீசல் விலை 93 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



இதைக் கண்டித்து இன்று பொள்ளாச்சியில் உள்ள மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திராவிட கழகத்தினர் இணைந்து இரு சக்கர வாகனத்தை கயிறு கட்டி சாலையில் இழுத்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த 2014ஆண்டு வரை 10.39 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான வரி தற்போது 32.90 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களை பாதிப்பதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீது விதிக்கப்படும் வரியைக் குறைத்து, குறைந்த விலையில் பெட்ரோல் டீசலை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...