கோவை: வால்பாறையில் சம சீதோஷ்ண நிலையின் காரணமாக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இந்த தேயிலைத் தோட்டங்களில் தமிழகம் கேரளம் மற்றும் வட மாநிலங்களான அஸ்ஸாம், ஜார்க்கண்ட், பீகார் போன்ற பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக வால்பாறை பகுதியில் மாறி மாறி மழை பெய்து வெயில் அடித்து வந்தது. மேலும், தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் தேயிலைச் செடிக்கு தேவையான உரங்களைப் போட்டு பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக தற்போது அடிக்கும் வெயிலில் தேயிலைச் செடிகளின் குருத்து இலை அதிகரித்து தேயிலை மகசூல் கூடி உள்ளது.

இதன் காரணமாக, தேயிலைத் தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. தேயிலை உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பல்வேறு பணிகள் அதிகம் கிடைத்து வருகின்றன. இதனால், அதிகப்படியான கொழுந்து பறித்தல், உரம் போடுதல், மருந்து அடித்தல் பணிகளால் அதிகப்படியான வருவாயும் கிடைக்கிறது. இது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.