கோவை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட மது பாட்டில்கள் - போலீஸார் பறிமுதல்..!

கோவை: கோவை சுண்டக்காமுத்தூர் அருகே சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1130 மது பாட்டில்களை குனியமுத்தூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை சுண்டக்காமுத்தூர் அருகே சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1130 மது பாட்டில்களை குனியமுத்தூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கோவை சுண்டக்காமுத்தூர் அருகே செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பாட்டிலில் சுத்தம் செய்யும் ஃபேக்டரியில், செல்வராஜ் மைத்துனர் விக்னேஷ் என்பவரும் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் விற்பனையாளர் சங்கர் என்பவரும் கூட்டாக இணைந்து ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி 1130 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தனர்.



அவர்கள், கள்ளத்தனமாகப் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது குனியமுத்தூர் காவல் துறைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் விரைந்து சென்று அனைத்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து, இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.



அங்கு அட்டைப் பெட்டிகள் மற்றும் சாதாரணமாக மதுபாட்டில்கள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தது. காவல்துறை விசாரணையில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் வாங்கியதாகவும் அதை கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்கில் இந்த ஃபேக்டரியில் பதிக்க வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த காவல்துறை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இதில் தொடர்பு உள்ளவர்களை குனியமுத்தூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...