கோவை: பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள மலைவாழ் குடியிருப்புப் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள 17 மலைவாழ் குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்ல தடை விதித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவிட்டுள்ளார். மலைவாழ் மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று பரவாமல் இருக்க வனத்துறை மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரணம் போன்ற உதவிகள் செய்ய விரும்பும் அறக்கட்டளையினர், நிறுவனத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற்று வனத்துறை ஊழியர்களுடன் ஒருவர் மட்டும் சென்று நிவாரண உதவி வழங்கலாம் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.