கோவை: வால்பாறையில் வாகன ஓட்டிகளுக்கு சாலையில் பாதுகாப்பான போக்குவரத்து குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் முருகையா காந்தி சிலை பேருந்து நிலையம் அருகில் சாலையில் சென்ற இருசக்கரம், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களை வரவழைத்து பாதுகாப்பான போக்குவரத்து பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். விபத்தின் போது தலையில் ஏற்படும் காயத்தை தவிர்ப்பதற்கும், உயிர் இழப்பைத் தடுக்கவும் தலைக்கவசம் பயன் தரும் என்று தெரிவித்தார்.
மேலும், ஆட்டோவை ஓட்டுபவர்கள் டிரைவர் இருக்கையில் பயணிகளை அமர வைக்க வேண்டாம். அளவான பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கார், வேன், லாரி ஓட்டுநர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் மது அருந்தி வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஓட்டுநர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.