கோவை: கோவையில் குளங்கள், வாய்க்கால்கள் புனரமைக்கும் பணிகள் நடந்துவரும் நிலையில், நீர்நிலைகள் சார்ந்து இயங்கி வரும் தன்னார்வ அமைப்புகள் நீர் கரங்கள் கூட்டமைப்பு கோவையின் நீர்நிலைகளைக் காத்திட கோரிக்கை வைத்துள்ளன.

கோவையில் உள்ள நீர்நிலைகளில் பொதுப்பணித்துறை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் குளங்கள் மற்றும் அதன் வாய்க்கால்களை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், அதன் உயிர் சூழல் பாதிக்கப்படும் படியாக கான்கிரீட் தடுப்பு அமைப்பு, கான்கிரீட் கற்களை பதிப்பது போன்ற உயிர் சூழலுக்கு எதிரான பணிகள் நடந்து வருவதால், அதனை கோவையின் நீர்நிலைகள் சார்ந்து இயங்கி வரும் தன்னார்வ அமைப்புகள் நீர் கரங்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்றிணைந்து அதில் திருத்தங்களை மேற்கொள்ள அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.
கோரிக்கைகளை முன்வைத்து இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு திட்டங்களில் என்னென்ன உயிர் சூழலுக்கு ஏற்ற மாறுதல்களைக் கொண்டுவரலாம் என்ற விண்ணப்பத்தை கொடுத்திருக்கின்றன.
இதில் சிறுதுளி அமைப்பின் திருமதி வனிதா மோகன், கௌசிகா நதி நீர் கரங்கள் அமைப்பிலிருந்து செல்வராஜ், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டன், CUBE அமைப்பிலிருந்து திருமதி விண்ணி பீட்டர், ராக் அமைப்பு, குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து இந்த கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.