கோவை: கோவை கிணத்துக்கடவு தொகுதியில் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட கிணத்துக்கடவு பேரூராட்சி, கல்லாபுரம், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால்மண்டபம் ஆகிய பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த தடுப்பூசி முகாமில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்த தடுப்பூசி போடும் பணிகளை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு செய்து, மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வுகளில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் முகமது யாசின், கிணத்துக்கடவு முன்னாள் பேரூராட்சித் தலைவர் கதிர்வேல், கணேஷ்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலச்சந்திரன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சக்தி சரண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.