வால்பாறையில் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும் நிலையில் அரசு பேருந்துகள் தயார்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும் நிலையில் அரசு பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.


கோவை: கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும் நிலையில் அரசு பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசு பேருந்துகளைப் பராமரிக்க அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கிவருகிறது. இங்கு 39 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வால்பாறையில் இருந்து தேயிலைத் தோட்டப் பகுதிகளான முடீஸ், பண்ணி மேடு, சோலையார் அணை, சேக்கல் முடி, வில்லோனி, சின்கோனா, சின்னக்கல்லார், கருமலை பாலாஜி கோயில், பழனி, திருப்பூர், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்ட காரணத்தினால் பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும் நிலையில் உடனடியாக பேருந்துகளை இயக்க அனைத்து பேருந்துகளையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...