கோவை: கேரளாவில் இருந்து ரயில் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரளாவில் மதுக்கடைகள் திறந்து உள்ளதால் அங்கிருந்து கார் இருசக்கர வாகனம் மற்றும் ரயில்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு, கோவையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று கேரள மாநிலத்தில் இருந்து கோவை வந்த ஒரு ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.
இதையடுத்து, கோவை ரயில்வே போலீசார் அந்த ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது, அந்த ரயிலில் வந்த 3 பேரிடம் 17 மதுபாட்டில்கள் இருந்தது.
இதனை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், பிடிபட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.