இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கட்டணத்தில் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்குகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கட்டணத்தில் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்குவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கட்டணத்தில் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்குவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கூறியதாவது, ‘‘தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் வலைத்தளத்தில் கேட்கப்படும் தகவல்களை பயணிகள் பூர்த்தி செய்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.

மேலும், இந்த சலுகை ஆன்லைன் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். விதிமுறைகளுக்கு உட்பட்டது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இதுவரை யாரும் இந்த சலுகையை பயன்படுத்தவில்லை. மேலும், அவர்களுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் வலைத்தளம் அல்லது பயணிகள் சேவை மைய தொலைபேசி எண்களில் பயணிகள் தொடர்பு கொள்ளலாம்'' என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...