பொள்ளாச்சியில் காவல்துறை வாகன தணிக்கையில் கேரளா மதுபானங்கள் மற்றும் கள் பறிமுதல்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், பொள்ளாச்சியில் காவல்துறை பல்வேறு இடங்களில் நடத்திய வாகன தணிக்கையில் 65 லிட்டர் கேரளா மதுபானங்கள் மற்றும் 8 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், பொள்ளாச்சியில் காவல்துறை பல்வேறு இடங்களில் நடத்திய வாகன தணிக்கையில் 65 லிட்டர் கேரளா மதுபானங்கள் மற்றும் 8 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இந்தநிலையில், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிலர் சட்டவிரோதமாக மதுபானங்கள் வாங்கி வந்து, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதுக்கி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், பொள்ளாச்சி காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில், தீவிர வாகனத் தணிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பொள்ளாச்சி வடக்கிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாகன தணிக்கையில் ஐந்து பேரிடமும், தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20 பேரிடமும் இருந்து, 65.425 லிட்டர் கேரள மதுபானங்கள் மற்றும் 8 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக, 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து வாகன தணிக்கைகள் நடைபெறும் என்றும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...