கலெக்டர் உத்தரவால் பத்தாண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெறும் கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டம்: நில உரிமையாளர்கள், தொழில் துறையினர் வரவேற்பு

கோவை: கலெக்டர் உத்தரவால் பத்தாண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெறுகிறது கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டம். நில உரிமையாளர்கள் மற்றும் தொழில் துறையினர் இதனை வரவேற்றுள்ளனர்.



கோவை: கலெக்டர் உத்தரவால் பத்தாண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெறுகிறது கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டம். நில உரிமையாளர்கள் மற்றும் தொழில் துறையினர் இதனை வரவேற்றுள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையம் கோவை மட்டுமின்றி சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டம் கடந்த 2010 திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 627.89 ஏக்கரில் அமல்படுத்தப்பட உள்ள இந்த விரிவாக்கத்த் திட்டத்தில் 134 ஏக்கர் முப்படைகளுக்கு சொந்தமான நிலம் உள்ளது.

இந்த விரிவாக்கத்த் திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் தற்போது விமான நிலைய ஓடுபாதை நீலத்தை 9,500 அடியிலிருந்து 12,500 அடியாக அதிகரிக்கவும் சர்வதேச விமான நிலைய அந்தஸ்துக்கு ஏற்ப பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முடியும்.

நில ஆர்ஜித பணிகள் நிறைவடையாததால் கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மறுபுறம் இந்திய விமான நிலையங்கள் ஆணையகம் பல கோடி ரூபாய் தயாராக வைத்துள்ளது. எந்த நேரம் நிலத்தை தமிழக அரசு ஒப்படைத்தாலும் உடனடியாக அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையகம் தயாராக உள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட கலெக்டர் நேற்று கோவையில் சிறப்புக் கூட்டம் நடத்தி அதில் விமான நிலைய விரிவாக்கத்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த உதவும் வகையில் நிலங்களை விரைவில் ஆர்ஜிதம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை நில உரிமையாளர்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பத்தாண்டுகளாக நிறைவடையாத திட்டம் தற்போது கலெக்டர் உத்தரவால் புத்துயிர் பெற்றுள்ளது என அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நில உரிமையாளர் மாணிக்கம் கூறியதாவது, ‘‘கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் மொத்தம் உள்ள நிலங்கள் 23 பிளாக் என பிரிக்கப்பட்டு நில ஆர்ஜித பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுவரை 30% நில உரிமையாளர்களுக்கு மட்டுமே தொகை வழங்கப்பட்டுள்ளது.

எந்த அடிப்படையில் நில உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று தெரியவில்லை. காரணம் இதுவரை நிலத்துக்கு தொகை பெற்றுள்ள உரிமையாளர்கள் பலர் அதிக நிலப்பரப்பை கொண்டவர்கள். 5 சென்ட் 10 சென்ட் என குறைந்த நிலம் கொண்ட உரிமையாளர்கள் யாருக்கும் இதுவரை தொகை வழங்கப்படவில்லை. கலெக்டர் தற்போது அறிவித்துள்ள உத்தரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எங்களின் கோரிக்கையெல்லாம் அனைத்து நில உரிமையாளர்களுக்கும் பாகுபாடு இல்லாமல் நிதியை விரைந்து வழங்கி நிலத்தை ஆர்ஜிதம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆகும்.'' என்று கூறினார்.

கொங்கு குளோபல் போரம்(Kongu Global Forum) கூட்டமைப்பின், இயக்குநர், டி.நந்தகுமார் கூறியதாவது, ‘‘கோவை விமான நிலையத்தை பயன்படுத்திவரும் 7 மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் துறையினர் சார்பில் இந்தக் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். கோவை சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச விமான போக்குவரத்து அதிகரிக்கவும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் பல நகரங்களுக்கு புதிதாக சேவை தொடங்கவும் தற்போது இருக்கும் நகரங்களுக்கு இடையிலான சேவையை அதிகரிக்கவும் மத்திய மாநில அமைச்சர்களை நேரில் சந்தித்து நாங்கள் மேற்கொண்ட முயற்சியால் கோவை விமான நிலையத்தில் பல்வேறு புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளன.

விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது கலெக்டரின் உத்தரவு தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நிலங்களை தமிழக அரசு ஒப்படைத்தால் போதும் உடனடியாக இந்திய விமான நிலையங்கள் ஆணையகம் அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளது. எனவே, நில உரிமையாளர்களிடம் விரைவாக நிலத்தைப்பெற்று அவற்றை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். தவிர, முப்படைகளுக்கு சொந்தமான நூற்றி முப்பத்தி நாலு ஏக்கர் நிலத்தையும் ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை விமான நிலையத்தில் இடப் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக உள்கட்டமைப்பு வசதிகள் சர்வதேச அந்தஸ்துக்கு ஏற்ப இல்லை. தவிர, ஓடுபாதை நீளமும் அதிகரிக்க முடியாமல் உள்ளது. நிலங்கள் ஒப்படைக்கப்பட்டவுடன் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும். இதனால் கோவையில் இருந்து உள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கு நேரடி விமான சர்வீஸ் தொடங்க வாய்ப்பு ஏற்படும். இதனால் கொங்கு மண்டலத்தின் தொழில்வளர்ச்சி மிக சிறப்பாக இருக்கும்.

சர்வதேச விமான போக்குவரத்து அதிகரிக்க ‘Billateral agreement', ‘Point of Call' உள்ளிட்ட பிரிவிலும் கோவை விமான நிலையத்தை சேர்க்க எங்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

கோவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சியில் கொங்கு மண்டலம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை'' என்று கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...