பொள்ளாச்சி அருகே நார் தொழிற்சாலையில் தீ விபத்து - தீ அணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்..!

கோவை: பொள்ளாச்சி அருகே நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்து விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்து விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை காளியாபுரம் வாய்க்கால் மேடு அருகே தனியார் நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தென்னை நார் கழிவில் இருந்து பித் கட்டி தயார் செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக நார்க்கழிவு தூள்களை வெயிலில் கொட்டி வைத்து காயவைப்பது வழக்கம்.

இந்தநிலையில், இன்று, திடீரென காய வைக்கப்பட்டு இருந்த நார் தூள் தீப்பிடித்து எரிந்தது இதைப் பார்த்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மேலும் நார் துகளில் பரவியதால் பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...