வால்பாறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள நகராட்சி மைதானப் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை..!

கோவை: வால்பாறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள நகராட்சி மைதானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வால்பாறை கால்பந்து சங்கத்தினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள நகராட்சி மைதானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வால்பாறை கால்பந்து சங்கத்தினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற நாச்சிமுத்து கால்பந்தாட்ட மைதானம் மிகவும் பழுதடைந்த நிலையில் வால்பாறை கால்பந்து சங்கத்தினர் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி மூலம் மறுசீர் அமைக்கும்பணி துரிதமாக நடைபெற்று வந்தது இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து அப்பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்த நகராட்சி மைதானம் பாதுகாப்பு இல்லாததால் மைதானத்திற்குள் செல்லும் வாகனங்களால் மீண்டும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள மைதானப் பணியை கால்பந்தாட்ட வீரர்களின் நலன் கருதி விரைந்து சீர் செய்து தர கால்பந்து சங்கத்தினரும் பொது மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...