உதகையில் 53 வயது பெண் அடித்துக் கொலை... கொரோனா தொற்றால் அவர் உயிரிழந்தார் என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..!

நீலகிரி: உதகையில் 53 வயது பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்று கூறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


நீலகிரி: உதகையில் 53 வயது பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்று கூறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



உதகையில் இருக்கக்கூடிய கியூ பிரிவு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முஸ்தபா. 55 வயதான இவருக்கும் உதகை அருகே உள்ள காந்தல் புதுநகர் பகுதியைச் சேர்ந்த மாகி என்ற 53 வயதான பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

முஸ்தபா, மாகியை தனியாக வீடு எடுத்து தங்க வைத்திருந்ததும் தெரியவந்திருக்கிறது. இந்தநிலையில், இன்று காலை முஸ்தபா, மாகியின் உறவினர்களைத் தொடர்புகொண்டு கொரோனா தாக்கத்தின் காரணமாக மாகி இறந்துவிட்டதாகவும் எனவே, உடலை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறி காரில் கொண்டு சென்று உடலை வழங்கியுள்ளார். வாகனத்தில் இருந்து இறக்கும்போது மாகியின் உடலானது முழுவதும் துணியினால் சுற்றப்பட்டிருந்தது.



இதையடுத்து, உறவினர்கள் மாகியின் உடலை தங்களது வீட்டிற்கு கொண்டு சென்று பார்த்தபோது முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் இருந்தது சந்தேகத்தைத் தூண்டியுள்ளது. தொடர்ந்து மாகியின் உறவினர்கள் உடனடியாக உதகையில் உள்ள ஜி1 காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் உள்ளிட்டோர் ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், உடலை ஒப்படைத்த உதவி ஆய்வாளர் முஸ்தபாவைப் பிடித்து காவல் துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். ஏற்கெனவே இவர்கள் இருவருக்கும் தகாத உறவு இருந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உடலை மாகியின் உறவினர்கள் இடையே ஒப்படைக்கும் போது கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இது குறித்து வெளியில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் உடனடியாக உடலை அடக்கம் செய்யுமாறும் முஸ்தபா தெரிவித்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...