பொள்ளாச்சி தாலுக்காவில் ஆன்லைன் மூலம் ஜமாபந்தி - இரண்டு நாட்களில் 44 மனுக்கள் பெறப்பட்டது..!

பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று காரணமாக பொள்ளாச்சி தாலுக்காவில் ஆன்லைன் மூலம் ஜமாபந்தி நடைபெற்றது. இரண்டு நாட்களில் 44 மனுக்கள் பெறப்பட்டதாக வருவாய்த்துறை தகவல் தெரிவித்துள்ளது.


பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று காரணமாக பொள்ளாச்சி தாலுக்காவில் ஆன்லைன் மூலம் ஜமாபந்தி நடைபெற்றது. இரண்டு நாட்களில் 44 மனுக்கள் பெறப்பட்டதாக வருவாய்த்துறை தகவல் தெரிவித்துள்ளது.

வருவாய்த் துறை சார்பில் ஆண்டுதோறும் பொதுமக்கள் குறைகளைத் தீர்க்க ஜமாபந்தி எனப்படும் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். பொள்ளாச்சியில் இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த முறை நேரடியாக மனுக்கள் பெறும் நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. மாறாக இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைன் வாயிலாக கோரிக்கை மனுக்கள் வருவாய்த்துறை சார்பில் பெறப்பட்டு வருகின்றன.

இதுதவிர, பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டிகள் மூலமும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி சார் ஆட்சியர் பொறுப்பு மகாராஜ் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், இரண்டு தினங்களில் முதியோர் உதவித்தொகை, விதவை சான்றிதழ், பட்டா மாறுதல் உள்ளிட்ட 44 மனுக்கள் பெறப்பட்டதாகவும், இந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...