கோவை: ஆனைமலை நெல்லுகுத்திபாறை அருகே குடியிருப்பு பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுகளை அப்புறப்படுத்தி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவதியுறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனைமலை நெல்லு குத்தி பாறை அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் வீதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில், கிருஷ்ணன் கோயில் வீதி மற்றும் ஆனைமலை-சேத்துமடை பிரதான சாலை சந்திப்பு பகுதியில், காய்கறி, இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுகளை அப்புறப்படுத்தி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதனால் அவதியுறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.