கோவை ஆர்.எஸ்.புரம் மல்டி லெவல் கார் பார்க்கிங் பணிகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க திட்டம்..!

கோவை: கோவையில் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் பொருட்டு ஆர்.எஸ்.புரம் மல்டி லெவல் கார் பார்க்கிங் பணிகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.


கோவை: கோவையில் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் பொருட்டு ஆர்.எஸ்.புரம் மல்டி லெவல் கார் பார்க்கிங் பணிகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.



கோவை மாநகரில் பிரதான சாலைகளில் அதிகரித்து வரும் வாகன நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காண முதல் கட்டமாக ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் ரூ.43 கோடி மதிப்பீட்டில் 4.5 ஏக்கர் பரப்பளவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட முடிவு செய்யப்பட்டது. தனியார் நிறுவனத்தின் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பணி தொடங்கப்பட்டது. தற்போது கட்டுமானப் பணிகள் பெரும்பான்மை அளவில் நிறைவு பெற்றுள்ள நிலையிலும், கார்களை ஏற்றி, இறக்கப் பயன்படும் ‘ஹைட்ராலிக்’ இயந்திர தொழில் நுட்பங்களை நிறுவுதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்ற நிலையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டத்தின் பணிகள் சற்றே மந்த நிலையில் இருந்தன. ஆனால், தற்போது வேகமெடுத்துள்ளன. அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் பெரும்பான்மையான அளவு நிறைவு பெற்றுவிட்டன. எஞ்சிய வேலைகள், உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு வேலைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு மின் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அதற்காக விண்ணப்பித்துள்ளோம். விரைவில் கிடைத்து விடும். தற்காலிகமாக சோதனை ஓட்டங்கள் உள்ளிட்டவை ஜெனரேட்டர் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன’’ என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...