வால்பாறை மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் படகு இல்லத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்!

கோவை: வால்பாறை மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி சார்பில் படகு இல்லத்தை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.


கோவை: வால்பாறை மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி சார்பில் படகு இல்லத்தை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சார்பில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுத்தோட்டத்தில் இருந்து உற்பத்தியாகும் ஆறு காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா வழியாக நடுமலை ஆற்றில் கலக்கிறது.

குறிப்பாக, வால்பாறையை சுற்றியுள்ள காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா மற்றும் வால்பாறை நகரில் சேகரமாகும் கழிவு நீர் அனைத்தும் இந்த ஆறு வழியாக வந்து சேருகிறது.



இதனிடையே, ஸ்டான் மோர் சாலையில் நடுமலை ஆற்றில் கலக்கும் இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டு படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து கழிவுகளும் இந்த படகு இல்லத்தில் வந்து சேர்கின்றது. கழிவு நீரும், குப்பைகளும் சேர்ந்து இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

ஆகவே, இவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். மேலும் கழிவுநீர் குப்பைகள் சிறுவர் பூங்கா வரை தேங்கி நின்றன. எனவே, படகு இல்லத்தில் உள்ள கழிவுநீரை அகற்றி சுத்தப்படுத்த பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கழிவு நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...