கோவை: வால்பாறை பகுதிக்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறை பகுதிக்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தொற்று பரவலை தடுக்க சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறையினர் பல்வேறு துரித நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று வால்பாறையில் உள்ள டாடா குரூப், உட்பிரியார் குரூப், பிபிடிசி குரூப், வாட்டர் பால்ஸ் குரூப் உள்ளிட்ட பகுதிகளுக்கு தலா 168 டோஸ் தடுப்பூசிகளும், பாரி அக்ரோ மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய நிறுவனங்களுக்கு தலா 156 டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.
இதனிடையே, வால்பாறை டவுன் பகுதி மற்றும் பிறபகுதியில் உள்ள மக்களுக்காக வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி மையத்தில் மிகக்குறைந்த அளவே தடுப்பூசிகள் இருந்ததால், அதிக அளவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தும் தடுப்பூசிகள் முடிந்து போடமுடியாததால் பெரும் வேதனையுடன் திரும்பிச்சென்றனர்.
எனவே, பொதுமக்களின் நலன்கருதி வால்பாறைப்பகுதிக்குகூடுதலாக தடுப்பூசி வழங்க சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.