கோவை மற்றும் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், ஏழை மக்கள், காவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு உதவி வரும் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிர்வாகி..!

திருப்பூர்: கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் உள்ள கோவை மற்றும் திருப்பூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், ஏழை மக்கள், காவலர்கள் என 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிர்வாகி உதவி வருகிறார்.


திருப்பூர்: கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் உள்ள கோவை மற்றும் திருப்பூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், ஏழை மக்கள், காவலர்கள் என 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிர்வாகி உதவி வருகிறார்.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்து உள்ள சூழ்நிலையில் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை சார்பில், கோவை மற்றும் திருப்பூரில் கடந்த 40 நாட்களில் 15,000க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு நல உதவிப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவன தலைவர் திருமதி இந்திராணி கூறியதாவது, ‘‘கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் கடந்த 40 நாட்களாக உதவி செய்து வருகிறேன்.



அரசு துறையுடன் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 2,000 மாற்றுத்திறனாளிகள் இருப்பிடம் கண்டறிந்து அவர்கள் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று 5 கிலோ அரிசி உள்ளிட்ட உதவிப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியுள்ளோம்.



தவிர, மதிய உணவு ஏழை மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம்.



கோவை மாவட்டத்தில் சோமயம்பாளையம் பகுதியில் 25 திருநங்கைகளுக்கு ஒரு மாதம் தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கியுள்ளோம். இன்று கோவை மாவட்டத்தில் பிச்சனூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் மாற்றுத்திறனாளி செந்தில்குமார் என்பவருக்கு வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கியுள்ளேன். அதேபோல், இன்று மாலை துடியலூர் அருகே விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் கால்கள் செயலிழந்த நிலையில் உடலில் இடுப்புக்கு கீழ் எந்தவித உணர்வும் இல்லாமல் அவதிப்படும் நோயாளி ஒருவருக்கு சிறுநீர் வெளியேற்ற டியூப் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை செய்துள்ளேன்.

இந்திரா சுந்தரம் அறக்கட்டளை சார்பில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு நல உதவி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் நெருக்கடியான சூழ்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்வதே எனது நோக்கம்'' என்று அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...