கோவை: மேட்டுப்பாளையத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இரவு நேரங்களில் மலை அடிவார கிராமங்களிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஆண் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இரவு நேரங்களில் மலை அடிவார கிராமங்களிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஆண் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துரை, குரும்பனூர், தாசம்பாளையம், சமயபுரம் பகுதிகளில் இரவு நேரத்தில் நுழையும் இந்த காட்டுயானைகள் விவசாய பயிர்களான வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த யானையால் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்தாலும், விவசாய பயிர்களை சேதப்படுத்தி பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி வரக்கூடிய காரணத்தினால் இந்த யானையை கண்காணித்து, இதனுடைய நடமாட்டத்தை குறித்து ஆய்வு செய்வதற்காக யானைக்கு கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்திப் பிடித்து காலர் ஐ.டி . பொருத்துவதற்காக தமிழ்நாடு தலைமை வனப்பாதுகாவலர் இடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அவர் அளித்த அனுமதியின் பேரில், கோவை மாவட்ட அவன் அலுவலர் வெங்கடேஷ் மேற்பார்வையில் காட்டு யானை பாகுபலியை பிடித்து காலர் ஐ.டி.பொருத்துவதற்காக டாப்சிலிப் இருந்து கும்கி யானை கலீம்(57) இன்று மேட்டுப்பாளையம் வந்தது.
மேலும், 2 கும்கி யானைகள் நாளை மேட்டுப்பாளையம் வர உள்ளது. கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வந்த பிறகு வனகால்நடை மருத்துவ குழு ஆலோசனைப்படி காட்டு யானைக்கு காலர் ஐடி பொருத்தப்படும் என்று வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.