மேட்டுப்பாளையத்தில் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து ஆண் காட்டுயானை பாகுபலி அட்டகாசம் - கும்கி யானை வரவழைப்பு!

கோவை: மேட்டுப்பாளையத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இரவு நேரங்களில் மலை அடிவார கிராமங்களிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஆண் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



கோவை: மேட்டுப்பாளையத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இரவு நேரங்களில் மலை அடிவார கிராமங்களிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஆண் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துரை, குரும்பனூர், தாசம்பாளையம், சமயபுரம் பகுதிகளில் இரவு நேரத்தில் நுழையும் இந்த காட்டுயானைகள் விவசாய பயிர்களான வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த யானையால் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்தாலும், விவசாய பயிர்களை சேதப்படுத்தி பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி வரக்கூடிய காரணத்தினால் இந்த யானையை கண்காணித்து, இதனுடைய நடமாட்டத்தை குறித்து ஆய்வு செய்வதற்காக யானைக்கு கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்திப் பிடித்து காலர் ஐ.டி . பொருத்துவதற்காக தமிழ்நாடு தலைமை வனப்பாதுகாவலர் இடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அவர் அளித்த அனுமதியின் பேரில், கோவை மாவட்ட அவன் அலுவலர் வெங்கடேஷ் மேற்பார்வையில் காட்டு யானை பாகுபலியை பிடித்து காலர் ஐ.டி.பொருத்துவதற்காக டாப்சிலிப் இருந்து கும்கி யானை கலீம்(57) இன்று மேட்டுப்பாளையம் வந்தது.

மேலும், 2 கும்கி யானைகள் நாளை மேட்டுப்பாளையம் வர உள்ளது. கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வந்த பிறகு வனகால்நடை மருத்துவ குழு ஆலோசனைப்படி காட்டு யானைக்கு காலர் ஐடி பொருத்தப்படும் என்று வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...