பிரேம்-யில் இருந்து பிரேமா..! ஒரு திருநங்கையின் வாழ்க்கை பயணம்

கோவையைச் சேர்ந்தவர் பிரேமா. திருநங்கையான இவர் பெற்றோர்களால் ஒதுக்கப்பட்டு, பல்வேறு இன்னல்களை சந்தித்து தற்போது தன்மானம் ஒன்றே வாழ்க்கை என்பதனை உணர்ந்துள்ளார் அவர். 

 

அவரது வாழ்க்கை பயணம் குறித்து நமது நிருபரிடம் பிரேமா கூறியதாவது:-

 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஒரு பணக்கார குடும்பத்தில் 1976 ஆம் வருடம் உடன்பிறப்பில் 7-வதாக பிறந்தேன். பெற்றோர்கள் எனக்கு வைத்த பெயர் பிரேம். எனக்கு மற்ற குழந்தைகளைப் போல் பொம்மை மீதெல்லாம் ஆர்வம் கிடையாது. எப்போதும், நடிகை சில்க் ஸ்மிதா தான் ஆர்வம் அதிகம். சிலுக்குவினைப் போன்று ஆடை அணிவது, அலங்காரம் செய்துகொள்வது என 3 வயது முதலே நான் சிலுக்குவை அதிகம் பின்பற்ற தொடங்கினேன். 5 முதல் 7 வயது வரை பெண்களைப் போன்று பாவனை செய்து வந்தேன். ஆனால், அதனை பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின், இது 10 வயது வரையிலும் தொடர பெற்றோர்கள் என்னை கண்டித்தனர். ஆனாலும், தொடர்ந்து பெண்களைப் போலவே எனது செயல்கள் இருந்தால் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல உலவியல் ரீதியிலான சிகிச்சையினையும் வழங்கியுள்ளனர். 



இந்த நடவடிக்கையால் பெற்றோர்கள் என்னை வெறுத்தனர். இதனால் நான் 15 வயதில்  வீட்டை விட்டு வெளியேற்றினேன். கையில் இருந்த சொற்பத் தொகையினைக் கொண்டு பம்பாய் சென்று, அங்கு பல திருநங்கைகளின் அரவணைப்பில் இணைந்தேன். உணவு, தங்கும் இடம் உள்ளிட்டவற்றை திருநங்கைகள் எனக்கு வழங்கி தங்களுடன் இணைத்துக் கொண்டனர். பின், என்ன செய்யப்போகிறோம் என்பதை அறியாமல் மற்ற திருநங்கைகளுடன் இணைந்து பொது இடத்தில் பிச்சை எடுப்பது, விபச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டேன். அவ்வாறு அந்த திருநங்கைகள் எடுக்கும் பிச்சைத் தொகையானது தரகர்கள் மூலம் பெறப்பட்டு தினக் கூலியாக 30 ரூபாய் கிடைக்கும். இதைத்தொடர்ந்து, கால்பந்து மைதானத்தில் இலக்கை அடைய பந்து உதைக்கப்படுவதைப் போல் பம்பாயில் இருந்து தில்லி உள்ளிட்ட பல வடநாடுகளுக்குச் சென்று, 2010 ஆம்  ஆண்டு கோவை வந்தேன். அதன்படி ரயிலில் கோவைக்கு வர என்னுள்  எண்ணற்ற பல மன வேதனைகள், வருத்தங்கள் ஏற்பட்டது.

எனது பெற்றோரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்தாலும், இக்கோலத்தில் ஒரு திருநங்கையாக அவர்களைச் சந்தித்து வேதனை படுத்த வேண்டாம் என்று பெற்றோரை சந்திப்பதை தவிர்த்தேன். பின் உக்கடத்தில் உள்ள தூரத்து உறவினரிடம் வேலை கேட்டு திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சியில் சமையல் பணியாற்றும் அவர்கள் எனக்கும் அதில் ஒரு வேலை தந்தனர். ஆனால், ஊதியம் இல்லை, உணவு மற்றும் தங்குமிடம் மட்டுமே வழங்கப்பட்டது. உடலை விற்காமல், பிச்சை எடுக்காமல் சொந்த ஊதியத்தில் உணவு உண்ண அப்போதுதான் கிடைத்தது   படிப்படியாக வேலைகளை கற்ற பின் அந்த சமையல் பணியில் இருந்து வெளியேறி சொந்தமாக ஒரு சமையல் சேவையினை துவங்கினேன். முதலில் திருமணங்கள் ஏதுமின்றி காது குத்து, சீர் நிகழ்ச்சி உள்ளிட்ட சிறிய விழாக்களுக்கு மட்டுமே உணவு செய்யும் பணியினை செய்தும். திருநங்கை என்பதால் பலரும் ஆர்டர் கொடுக்க ஆலோசித்து, பின் சிறந்த சமையல் சுவையால் அனைவரையும் கவர்ந்து எனது சமையல் நிறுவனத்தில் 7 ஊழியர்களையும் பணியில் வைத்துள்ளேன். ஆனால், சமையல் பணிக்கான வாய்ப்புகள் குறைவாக வரும் காரணத்தால் கூடிய விரைவில் டேக்சி கார் ஓட்ட முடிவு செய்துள்ளேன்.



திருநங்கைகளுக்கு ஆதரவு கொடுங்கள்:-

இவ்வுலகில் ஆதரவு அற்ற குழந்தைகள், திருநங்கைகள் அனைவரும் என்னைப் போன்றே பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். நாங்கள் திருநங்கை என்பதால் பலரும் எங்களை ஒரு புழு போன்றே அருவருப்பாக பார்க்கின்றனர். ஆணின் மனதும், பெண்ணின் மனதும் இணைந்து பெற்ற எங்களது மனதில் வேதனைகள் மட்டுமே நிறைந்துள்ளது. இதை நாங்கள் வேண்டி விரும்பி பெற்றது இல்லை. இது இயற்கையான ஒன்று. எங்களது முகத்தில் இருக்கும் அலங்காரங்கள் நாங்கள் பூசியது இல்லை, இந்த சமுதாயம் எங்கள் மீது ஒருவித திணிப்பை, வேஷத்தை பூசியுள்ளது.

பெற்றோர்கள் தங்களது குடும்பத்தில் என்னைப் போன்றொருவர் இருந்தால் தயவுசெய்து வெறுத்து வெளியில் அனுப்பிவிடாதீர்கள். கோழையான ஒரு மனநிலை கொண்டவராக இருந்தால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வர். அல்லது என்னைப் போன்று உடலை விற்று பிழைப்பு நடத்துவர். பெற்றோர்கள் தங்களது வீட்டில் உள்ள திருநங்கை குழந்தைகளுக்கு ஆதரவு கொடுங்கள். அவர்களின் மனதிற்கு ஆறுதலான வார்த்தைகளை கூறுங்கள். தன்மானமான வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுங்கள். தற்போதுதான் நான் அதனை உணர்ந்துள்ளேன். அரசுத் தரப்பில் எங்களுக்கு என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் எங்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும். நிலம், வீடு உள்ளிட்ட பல திட்டங்கள் திருநங்கைகளுக்கு என அரசாங்கத் தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுகுறித்து திருநங்கைகளிடம் முழுமையான தகவல் சென்றடைவது இல்லை. நாங்கள் வாடகை வீட்டிற்கு சென்றால் உரிமையாளர் வீடு தர மறுக்கின்றனர். அரசு இதை கருத்தில் கொண்டு எங்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும்.

திருநங்கைகளின் வாழ்வில் மாற்றம் என்பது அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியம் அல்ல. மக்கள் நினைத்தால் மட்டுமே எங்களுக்கான வாழ்வில் முழு மாற்றமும், ஏற்றமும் ஏற்படும்'' என்றார்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...