வால்பாறை ஆதிவாசி பழங்குடி கிராமங்களில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்..!

கோவை: வால்பாறை பகுதியில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மருத்துவர்கள் ஆதிவாசி பழங்குடி மக்கள் கிராமங்களில் சிறப்பு முகாம் அமைத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.


கோவை: வால்பாறை பகுதியில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மருத்துவர்கள் ஆதிவாசி பழங்குடி மக்கள் கிராமங்களில் சிறப்பு முகாம் அமைத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை மலைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 2500 பேர்களுக்கு மேல் வனப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது கொரோனா பெருந்தொற்று அனைத்துப் பகுதிகளிலும் பரவி வருகிறது. அதைப்போல் வனப் பகுதிக்குள் வாழும் ஆதிவாசி பழங்குடி மக்களுக்கும் இந்தக் கொரோனா பெருந்தொற்றுப் பரவி இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய வால்பாறையில் உள்ள சுகாதார துறை மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் மருத்துவக் குழு சிறப்பு முகாம் மூலம் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.





நெடுகுன்று செட்டில் மெண்டு பகுதியில் 24 குடும்பங்கள் உள்ளன. அங்கு, 30-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்கள் வனப் பகுதியை விட்டு வெளியே வருவது இல்லை. அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற பரிசோதனை செய்து யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர் சுகாதாரத் துறையினர். இதுபோன்று ஆதிவாசி பழங்குடி கிராமங்களில் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்வதால், கொரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...