வால்பாறையில் தடையை மீறி கடையைத் திறந்து கூட்டத்தைக் கூட்டிய வியாபாரிக்கு அபராதம்..!

வால்பாறை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வால்பாறையில் கடையைத் திறந்து கூட்டத்தைக் கூட்டி வியாபாரம் செய்த வியாபாரிக்கு அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.


வால்பாறை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வால்பாறையில் கடையைத் திறந்து கூட்டத்தைக் கூட்டி வியாபாரம் செய்த வியாபாரிக்கு அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கின் காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு மளிகை மற்றும் காய்கறி பழங்களை விற்பனை செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், வால்பாறையில் சில பகுதிகளில் வியாபாரிகள் சிலர் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சிலருக்கு எச்சரிக்கை செய்தும் கூட்டமாக வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தனர்.



மேலும், ஒரே பகுதியில் பல வாகனங்களை நிறுத்தி காய்கறி வியாபாரம் செய்ததையும் கண்டு, அவர்களை வெவ்வேறு இடங்களில் வியாபாரம் செய்ய அறுவுறுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் மளிகை, காய்கறி, பழங்கள் வாகன வியாபாரம் செய்யும் வண்டிகள் காலை 10 மணிக்கு மேல் தேயிலைத் தோட்டப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...