மரங்களுக்கு மறுவாழ்வு அளித்த ஓசை மற்றும் பசுமைதேசம் தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா



கோவை முதல் பொள்ளாச்சி சாலையினை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, அந்த சாலையில் உள்ள மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை பணியினை மேற்கொண்ட வேலையில் அந்த மரங்களை மாற்று இடத்தில் நட அனுமதி வழங்கக் கோரி ஓசை மற்றும் பசுதைதேசம் தன்னார்வலர்கள் பொள்ளாச்சி துணை ஆட்சியர் நிர்வாகத்திடம் அனுமதிகோரினர்.

அதன்படி, கோவை- பொள்ளாச்சி சாலையில் இருந்த சுமார் 19-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் அகற்றி அந்த சாலையில் அமைந்துள்ள ரத்தினம் கல்வி நிறுவனம், கோவில்பாளையம் வருவாய் துறை அலுவலக வளாகம், ஆச்சிப்பட்டியில் அமைந்துள்ள திசா பள்ளி, செட்டிபாளையத்தில் உள்ள ஃபையர் பெர்ட் (Fire Bird) நிறுவனம், மதுக்கரை சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடம், ரத்தினம் பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடப்பட்டு தற்போது அந்த மரங்கள் மறுவாழ்வு பெற்றது போல் துளிர்விட்டு வளரத் துவங்கியுள்ளன.

இதனைத்தொடர்ந்து, இந்த மரங்களை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நட்ட ஓசை சையத் மற்றும் பசுமை தேசம் இராஜேந்தர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், ஓசை தன்னார்வலர் அமைப்பின் சார்பில் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட வன அலுவலர் பத்திரசாமி பங்கேற்றார்.







இந்நிகழ்வில், ஓசை சையத் மற்றும் பசுமை தேசம் இராஜேந்தர் ஆகியோர் பேசியதாவது:-

கோவை முதல் பொள்ளாச்சி சாலையில் மரங்கள் நிரைந்து உள்ளன. அதனை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தடுத்து, மரங்களை மாற்று இடத்தில் நட்டு பராமறிக்க பொள்ளாச்சி துணை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டு தற்போது அந்த சாலையில் இருந்த மரங்கள் பல நிறுவனங்களில் நடப்பட்டுள்ளது. இன்னும் மீதமுள்ள 90க்கும் மேற்பட்ட மரங்களை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்கு அந்த சாலையில் உள்ள கல்லூரி, பள்ளி மற்றும் நிறுவனங்கள் அனுமதி அளித்தால் அந்த மரங்களை நட்டு பராமறிக்க முடியும்.

மரத்தினை வேருடன் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு மாற்றுவது என்பது சாதாரண செயல் அல்ல. மின்சார கம்பம், தரைக்கு அடியில் தொலைபேசி இணைப்புகள், தண்ணீர் குழாய் என பல பிரிவுகளிடம் அனுமதி பெற்று சேதங்கள் இன்றி செய்ய வேண்டும். இந்த முயற்சியில் எங்களுடன் இணைந்து பணியாற்றிய ராக், சிறுதுளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தன்னார்வலர் அமைப்பினர்க்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்'' என அவர்கள் கூறினர்.



Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...