கோவை: கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டுக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவை: கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டுக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மாவட்டத்தில் தினசரி மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் கோவையிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வந்தது.
பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையிலேயே காணப்பட்டதால், கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்த தமிழக முதல்வரின் அறிவுரைப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கிரெடாய் கோயம்புத்தூர் அமைப்பின் சார்பில் கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் 19 சிறப்பு மையத்தை தமிழக வனத்துறை மற்றும் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் கே.ராமச்சந்திரன், கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நாகராஜன், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், மாவட்ட பொறுப்பாளர்கள் பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.