கோவையில் முதல்வரிடம் ரூ. 60 லட்சத்துக்கும் மேல் கொரோனா நிதி வழங்கிய ITF', 'COSIEMA', 'OSMA', 'Annapoorna' குரூப்

கோவை: கொரோனா நோய் தொற்று பரவல் இரண்டாவது அலை தமிழகத்தில் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.


கோவை: கொரோனா நோய் தொற்று பரவல் இரண்டாவது அலை தமிழகத்தில் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.



நேற்று கோவையில் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதலமைச்சரிடம், இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) சார்பில் அதன் கன்வீனர், பிரபு தாமோதரன், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.



அதேபோல், கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நல சங்கம் ('COSIEMA) சார்பில், தலைவர், நல்லதம்பி மற்றும் முன்னாள் தலைவர் சுருளிவேல் ஆகியோர், 12 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினர்.



தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் (OSMA) சங்கம் சார்பில், நிர்வாகிகள் அருள்மொழி, ஜெயபால் மற்றும் ராம்பிரசாத் உள்ளிட்டோர் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினர்.

மேலும், ஸ்ரீ அன்னபூர்ணா குழுமம் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், செயல் இயக்குனர், ஜெகன் எஸ். தாமோதரசாமி ஆகியோர் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...