கோவை: கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக கோவை சர்வதேச விமான நிலையத்தில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை விமான நிலையத்தில், தற்போது நாள் ஒன்றிற்கு ஐந்து முதல் ஆறு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

கோவையில் இருந்து மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் விமான சேவை தொடர்ந்து இயக்கப்படுகிறது. மேலே, குறிப்பிட்ட நகரங்களுக்கு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் மட்டுமே சேவை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் 'இண்டிகோ' நிறுவனம் சார்பில், இயக்கப்படும் சில விமானங்கள், தொடர்ந்து ரத்து செய்யப்படுகின்றன, என்பதால் ஏர் இந்தியா சார்பில் மட்டுமே தினமும், டெல்லி மற்றும் மும்பைக்கு விமான சேவை ரத்து செய்யப்படாமல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மே மாதத்தில், கொரோனா நோய் தொற்றின் முதல் அலை காரணமாக தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை ஐந்தாக குறைந்தன. தற்பொழுது, இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் இந்த ஆண்டு மே மாதத்திலும் கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை ஐந்தாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.