கோவையில் முழு ஊரடங்கிலும் மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்..!

கோவை: கோவையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்து உள்ளது. இதனால், மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


கோவை: கோவையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்து உள்ளது. இதனால், மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.



கோவையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றது. குறிப்பாக, கோவை - திருச்சி ரோடு, உக்கடம் - ஆத்துப்பாலம் ரோடு, கோவை - மேட்டுப்பாளையம் ரோடு, அவினாசி ரோடு என முக்கிய சாலைகளில் இந்த மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளில் எப்போதும் வாகனப் போக்குவரத்து காணப்படும். இதனால், பகல் நேரங்களில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும்போது சிரமம் ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில், முழு ஊரடங்கு காரணமாக சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்து உள்ளது. பகல் 10 மணிக்கு மேல் வாகனங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகின்றன. இதன்காரணமாகக் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதுகுறித்து நெடுஞ்சாந்த் துறை அதிகாரி ஒருவர், ‘‘தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கட்டுமானப் பணிக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதனால், மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றது. கோவை-திருச்சி ரோட்டில் 3.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.253 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இதற்கான பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டது. சுங்கம் பகுதியில் மேம்பாலத்தில் இருந்து இறங்கு தளம் அமைக்கும் பணி தற்போது முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இதற்காகக் கம்பிகள் கட்டும் பணி நடக்கின்றது.

இதேபோல், கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையத்தில் மேம்பாலப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த இரு மேம்பாலப் பணிகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.



இதுதவிர, ஆத்துப்பாலம் மற்றும் அவினாசி ரோட்டிலும் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. சில இடங்களில் இரவிலும் பணிகள் நடக்கின்றது. பகல் நேரத்தில் வாகனப் போக்குவரத்து குறைந்து உள்ளதால், எவ்வித இடையூறும் இன்றி, பணிகள் நடக்கின்றன'' என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...