கோவை: நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறு குறு தொழில் என அனைத்து முடங்கிப் போயுள்ளது.
குறிப்பாக அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் என குறைந்த வருமானத்தில் வாழ்வாதாரத்தை பெற்று வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருமானத்தை இழந்து உள்ளனர். ஒருபுறம் கடன் தொல்லை, மறுபுறம் தொழிலுக்கு முதலீடு செய்த தொகை நஷ்டத்தில் உள்ளது.
எனவே, நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு என தனி நலவாரியம் அமைத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.