கோவையில் ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத மது விற்பனை: கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!

கோவை: ஊரடங்கு காலத்திலும் கோவையில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுகிறது. 150 ரூபாய் குவாட்டர் 350 ரூபாய், ஒரு பீர் 500 ரூபாய் என அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்களும், இரண்டு நாட்களாவது கடையைத் திறக்க வேண்டுமென குடிமகன்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: ஊரடங்கு காலத்திலும் கோவையில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுகிறது. 150 ரூபாய் குவாட்டர் 350 ரூபாய், ஒரு பீர் 500 ரூபாய் என அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்களும், இரண்டு நாட்களாவது கடையைத் திறக்க வேண்டுமென குடிமகன்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரண்டு வார கால ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால், டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆனால், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. வழக்கமாக 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் குவாட்டர் 350 ரூபாய்க்கும், ஒரு பீர் 500 ரூபாய்க்கும், 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் குவாட்டர் பிராந்தி பாட்டில் 600 ரூபாய்க்கு மேல் என பிராண்டுகளுக்கு ஏற்ப அதிக விலைக்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் கோவையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் நிறுவன தலைவர் சி.எம்.ஜெயராம், ‘‘ஒருபுறம் நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் காரணத்தால், மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் அட்மிட் செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில் மறுபுறம் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் அதிக பணம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கிலும் ஒரு சில சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களைக் கண்டறிந்து காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்பொழுது வாகனத் தணிக்கை செய்யும் போலீஸார் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் வருபவர்களை மடக்கிப் பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்களில் யாரேனும் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தி மதுபானம் எங்கு வாங்கப்பட்டது என தெரிந்து கொண்டு, உடனடியாக சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தநிலை தொடரும் பட்சத்தில் சட்டவிரோதமாக மதுபானத்தை தயாரித்து விற்பனை செய்யும் செயலில் கூட சில சமூக விரோதிகள் ஈடுபடத் தொடங்கி விடுவார்கள். எனவே, காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று கூறினார்.

குடிமகன்களிடம் பேசியபோது அவர்கள், ‘‘ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பே மதுபானங்களை வாங்கி வைத்துக் கொண்டோம். ஆனால், ஒரு வாரத்துக்குள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. தற்போது வேறு வழியின்றி மிக அதிக விலை கொடுத்து மதுபானங்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மிகவும் அநியாய விலைக்கு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர். இரண்டு நாட்களாவது ‘டாஸ்மாக்' மதுக்கடையை திறக்க வேண்டும். கடந்த முறையைப் போலவே, டோக்கன் முறையில் ஒவ்வொருவருக்கும் மதுபான பாட்டில்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட நோய் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுபான பாட்டில்களை வாங்கிச் செல்லத் தயாராக உள்ளோம்.'' என்று தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...