பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து, உடுமலை ரோடு தேர் நிலையத்தில் மூன்றாவது ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து, உடுமலை ரோடு தேர் நிலையத்தில் மூன்றாவது ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தற்போது 30 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. மத்தியப் பேருந்து நிலையத்தில் வாகனங்கள் நெரிசல் இன்றி செல்லும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. அதேபோல் கோவை சாலை -காந்தி சிலை சிக்னல் அருகில் இரண்டாவது ரவுண்டானா அமைக்கப்பட்டது.

இந்தநிலையில், பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் தேர் நிலையம் பகுதியில், உடுமலை - பல்லடம் இணைப்பு சாலையில் பிரமாண்டமாக மூன்றாவது ரவுண்டானா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிலாப் கற்களைக் கொண்டு ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி சுற்றி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.