கோவை: பொள்ளாச்சியில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தாதாகான் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் தாதாகான்(75). பொள்ளாச்சி நகரில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான இவர், கோவை மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கோவை தனியார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், திடீரென இன்று உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மூச்சு திணறல் உண்டானதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியில் அதிமுக மூத்த நிர்வாகி நோய் தொற்றால் உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.