கோவை: சிறுவாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணத்தால் அணையின் நீர்மட்டம் 15.48 அடியாக உயர்ந்துள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காட்டில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. கோவை மக்களின் முக்கிய நீர் ஆதரமாக சிறுவாணி நீர் கருதப்படுகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும் நூற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.
சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டது.
கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் துவங்கியதில் இருந்தே அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது. அணையின் நீர்மட்டம் 15 அடிக்கு கீழே சரிந்தது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாநகராட்சி சார்பாக சிறுவாணியில் இருந்து 75.33 எம்.எல்.டி நீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. 15 அடிக்கும் கீழே சென்ற நிலையில் அணையின் நீர்மட்டம் தற்போது 15.48 அடியாக உள்ளது' என்று தெரிவித்தார்.