கோவையில் மருத்துவமனைகளில் தாற்காலிக கட்டுப்பாடு மையம் அமைக்க கோரி சுகாதாரத்துறை அமைச்சரிடம் சிபிஎம் வலியுறுத்தல்!

கோவை: மருத்துவமனையில் சிகிச்சை பெரும் கொரோனா தொற்றாளர்களின் நிலை குறித்து உறவினர்கள் அறிய மருத்துவமனை வளாகத்தில் தாற்காலிக கட்டுப்பாடு மையத்தை அமைக்க வேண்டும் என கோவையில் சுகாதாரத்துறை அமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


கோவை: மருத்துவமனையில் சிகிச்சை பெரும் கொரோனா தொற்றாளர்களின் நிலை குறித்து உறவினர்கள் அறிய மருத்துவமனை வளாகத்தில் தாற்காலிக கட்டுப்பாடு மையத்தை அமைக்க வேண்டும் என கோவையில் சுகாதாரத்துறை அமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புக்கூட்டம் நடைபெற்றது.



இதில் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசுத்துறை, மருத்துவத்துறை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் மனு அளித்தனர்.

அதில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர்களோடு உதவி செய்ய உறவினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் தொற்று பரவுவதாக அறிகிறோம்.

எனவே, தனியார் மருத்துவமனைகளைப்போல தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்திடும் வகையில் பணியாளர்களை அதிகப்படுத்திட வேண்டும். ஆக்சிஜன் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் வினியோகத்தை அதிகப்படுத்திட வேண்டும். ரெம்டெசிவர் மருந்து விநியோகத்தை கூடுதலாக்க வேண்டும். நோய்த்தடுப்பு ஊசிக்காக நூற்றுக்கணக்கான மக்கள் பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. இதனை முறைப்படுத்திட வேண்டும்.

அதேபோல, இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான மக்கள் வெயில், மழையில் காத்திருக்கும் நிலை உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் மேற்கூரை அமைக்க வேண்டும். மேலும் மருத்துவமனை வளாகத்தில் தாற்காலிக தேனீர் கடை அமைத்திட வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் தாற்காலிக கட்டுப்பாட்டு வளாகம் அமைத்து தொற்று பாதித்தவர்களின் உடல்நலம், தடுப்பு மருந்து, ஆக்சிஜன் படுக்கை விபரம், ஆகியவற்றை ஒலிபெருக்கி மூலம் தெரியப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளின் சுகாதாரம், படுக்கை விரிப்புகள் இன்னும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

இதேபோல, சிஐடியு கோவை மாவட்டக்குழுவின் சார்பில், மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டம் மூலம் கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காப்பீட்டு நிறுவனங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுவதில்லை. இதனால் இந்த நாட்களில் சிகிச்சை பெற்று வீடு திரும்ப வேண்டிய நோயாளிகள் மருத்துவ காப்பீட்டிற்கான ஆணை கிடைக்கப்பெறாததால் வேலை நாள் வரையில் மருத்துவமனையிலேயே தங்க வேண்டிய நிலை உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை இருக்கும் சூழலில் மற்றொருவருக்கு சிகிச்சைக்கான படுக்கை கிடைக்காத நிலை உள்ளது. இப்படி தனியார் மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படுக்கைகளில் உள்ளவர்கள் காப்பீட்டு நிறுவனத்தின் உத்தரவாதத்திற்காக காத்திருக்க வேண்டி உள்ளது.

ஆகவே, இந்த பெருந்தொற்று காலம் நீங்கும்வரையில் விடுமுறை நாட்களிலும் காப்பீட்டு நிறுவனங்கள் அலுவலகம் செயல்படுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், காப்பீட்டு திட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம் என்கிற அறிவிப்பை தற்போதுதான் முதல்வர் அறிவித்துள்ளார். இதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...