கோவை: கோவை மாநகரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மூலமாக பெருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏழை எளியவர்களுக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய ரமலான் கிஃட் வழங்கப்பட்டது.

இஸ்லாமிய சமுதாயத்தினர் கடந்த ஒரு மாதமாக நோன்பு இருந்து அதிகமாக வழிபாடுகள் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து, நேற்று ஈகைத் திருநாள் ஈதுல் பிஃத்ர் எனும் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடினர்.
கொரோனா பெருந்தொற்று பரவலாக பாதித்து வரும் இந்த காலகட்டத்திலும் தங்களது வழிபாடுகளை கூட்டமாக அல்லாமல் தனித்தனியே வீடுகளில் குடும்பத்துடன் இணைந்து சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டு இவ்வுலகம் மற்றும் மறுஉலக வெற்றிக்காக பிரார்த்தனை புரிந்தனர்.
உலக அமைதிக்கும் கொரொனா பெருந்தொற்றுப் பாதுகாப்புக்காகவும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து, கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் செயலாளரான அப்துல் ஹக்கீம்,
செயலாளர், ‘‘கோவை மாநகரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மூலமாக பெருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏழை எளியவர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய ரமலான் கிஃட் சுமார் ஆயிரத்தி 400 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பெருநாள் தொழுகைக்கு முன்பாக பிஃத்ர் ஜக்காத் எனும் ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் பிரியாணி அரிசி சுமார் 7500 கிலோ சுமார் 3750 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. சுமார் 3000 கிலோ காய்கறிகள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் ரம்ஜான் பெருநாள் அன்று யாரும் பசியோடு இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த நாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலு, கோவை நகரத்தின் பல பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டன.
நோய்த்தொற்று காரணமாக சகோதர சமுதாய மக்களுக்கு வழக்கமாக வழங்கிவரும் பிரியாணி உணவு இம்முறை வழங்கப்படவில்லை. இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய தியாகத்திருநாள் ஹஜ்ஜூப் பெருநாள் அன்று அனைவருக்கும் பிரியாணி உணவும் இனிப்புகளும் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.'' என்று தெரிவித்துள்ளார்.