கோவையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று 10 விமானங்கள் இயக்கம்..!

கோவை: கோவையில் நீண்ட நாட்களுக்குப் பின் இன்று 10 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


கோவை: கோவையில் நீண்ட நாட்களுக்குப் பின் இன்று 10 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது.

இந்நிலையில், பல நாட்களுக்குப் பின் இன்று 10 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதிகாலை 5:00 மணிக்கு 'ஏர் அரேபியா' விமானம் ஷார்ஜாவுக்கு இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெங்களூரு, ஹைதராபாத், மங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்படுகின்றன.

மேலும், இன்று கடைசி விமானம் இரவு 9:55 மணிக்கு கோவையில் இருந்து சென்னை புறப்படுகிறது. உள்நாட்டு விமான சேவையில் 'இண்டிகோ', 'ஏர் இந்தியா', 'கோ ஏர்' உள்ளிட்ட நிறுவனங்கள் விமானங்களை இயக்குகின்றன.

நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் சராசரியாக 33 விமானங்கள் கோவையில் இயக்கப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக தினமும் ஆறு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...