கொரோனா பாதிப்பையடுத்து கடனை திருப்பி செலுத்த சாலையோர வியாபாரிகள் அவகாசம் தர கோரிக்கை!

கோவை: கொரோனா பாதிப்பு காரணமாக வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடனை திருப்பி செலுத்த போதிய அவகாசம் வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கொரோனா பாதிப்பு காரணமாக வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடனை திருப்பி செலுத்த போதிய அவகாசம் வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு பகல் 12 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சாலையோர வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் மணி கூறுகையில்,

கோவையில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். சாலையோர வியாபாரிகள் பெரும்பாலும் காய்கறி வியாபாரம், துளசி வியாபாரம், பழங்கள் மற்றும் சிற்றுண்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள்.

கொரோனா பரவல் முழு ஊரடங்கு காரணமாக சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமும், பொருள் உதவிகளும் தந்து மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். அதே போல் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு கடன் திட்டத்தில் வங்கிகள் மூலம் கடன்கள் எளிதில் கிடைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இதற்கு முன்னர் மத்திய அரசின் சிறப்பு கடன் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் பெற்றவர்கள், தவணையை திருப்பி செலுத்த 3 மாத காலம் அவகாசம் தர வேண்டும். நரி குறவர்கள் ஊசி, பாசி விற்பனைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் அவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மலுமிச்சம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்,” என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...