கொரோனா அச்சம்: கோவை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதத்தில் 86 ஆயிரம் பேர் மட்டுமே பயணம்!

கோவை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதத்தில் 86 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.


கோவை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதத்தில் 86 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் காரணத்தால் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு நகரங்களுக்கு வழங்கப்பட்டு வந்த விமான சேவையை தற்காலிகமாக சில ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

இந்த நிலையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2021 மார்ச் மாதம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 908 பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இதில், ஏப்ரல் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 87,252 பேர் மட்டுமே விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இது குறித்து கோவை விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் தற்போது தினமும் ஆறு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. நோய்த்தொற்று பரவல் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதனால் விமான பயணம் மேற்கொள்ள பயணிகள் ஆர்வம் காட்டுவதில்லை. தவிர பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு கடும் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தால் பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களும் அவற்றை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். ஏற்கெனவே ஏப்ரல் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கையை வெகுவாக குறைந்து உள்ள நிலையில் இந்த மாதம் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும்." இவ்வாறு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...