திருப்பூரில் அரசு காப்பீடு திட்ட அட்டையை ஏற்காத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை என அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை!

திருப்பூர்: திருப்பூரில் அரசு காப்பீடு திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ளாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் அரசு காப்பீடு திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ளாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ஆய்வு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், “திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. முழுமையாக கட்டுப்படுத்த முழு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பின்னலாடை நிறுவனங்கள் தாமாக முன்வந்து ஊரடங்கிற்குமுழு ஒத்துழைப்பு வழங்க நாளைய தினம் முதல் நிறுவனங்களை அடைப்பதாக உறுதி அளித்தது வரவேற்கத்தக்கது. பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்து வரக்கூடிய சூழ் நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

திருப்பூரில் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் உரிய ஆவணங்களுடன் அரசு காப்பீட்டு அட்டை வைத்திருந்தும் அதை ஏற்றுக்கொள்ளாத நிறுவனங்கள், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்தார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...