பொள்ளாச்சி அருகே ஊரடங்கு கட்டுபாடுகளை மீறிய வாகன ஓட்டிகளை உறுதிமொழி எடுக்க வைத்து அனுப்பிய போலீசார்..!

கோவை: பொள்ளாச்சி அருகே ஊரடங்கு கட்டுபாடுகளை மீறி 12 மணிக்கு மேல் உடுமலை ரோட்டில் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்து அனுப்பினர்.


கோவை: பொள்ளாச்சி அருகே ஊரடங்கு கட்டுபாடுகளை மீறி 12 மணிக்கு மேல் உடுமலை ரோட்டில் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்து அனுப்பினர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மதியம் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் உள்ளிட போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து உடுமலை சாலையில் ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி நோய்க் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிப்பேன் என்று உறுதிமொழி எடுக்க வைத்தனர்.



மேலும், ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே நடமாடினால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...