கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை தங்க நகை சங்கங்கள் சார்பில் ரூ.27 லட்சத்தில் ஆக்சிஜன் டேங்க்!

கோவை : கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தங்க நகை தொழில் துறையினர் சார்பில் ரூ.27 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் டேங்க், இரண்டு தினங்களில் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது.



கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தங்க நகை தொழில் துறையினர் சார்ந்த சங்கங்கள் சார்பில் ரூ.27 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் டேங்க், இரண்டு தினங்களில் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது.



கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க உதவும் வகையில் கோவை தங்க நகை வியாபாரிகள் சங்கம், தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கம், கோவை தங்கம் புல்லியன் சங்கம், ரவுண்ட் டேபிள் அமைப்பு மற்றும் வாசவி க்ளப் பைவ் ஸ்டார் சார்பில் ஆக்சிஜன் டேங்க் கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 27 லட்சம் செலவில் இந்த ஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முடிவடைந்த பின்னர் 2 தினங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இது குறித்து பேசிய கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம், "கொரோனா நோய்தொற்று பரவல் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆக்சிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம், கோவை ஜுவல்லர்ஸ் சங்கத்தின் தலைவர் சபரி நாத் மற்றும் கோவை புல்லியன் மெர்சன்ட்ஸ் சங்க செயலாளர் கார்த்திக் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்க் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.27 லட்சம் செலவில் டேங்க் கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்ததும் இரண்டு தினங்களில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

கோவை தங்க நகை வியாபாரிகள் சங்கம், தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் கோவை தங்கம் புல்லியன் சங்கம் சார்பில் கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 2,000 பாதுகாப்பு உடைகள் (PPE kit) மற்றும் 3,000 (Face Shield) மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளன. மிகவும் நெருக்கடியான சூழலில் மக்களுக்கு உதவுவது மிகுந்த மன திருப்தியை அளிக்கிறது. எதிர்வரும் நாட்களில் தங்க நகை தொழில் துறையினர் மேலும் பல உதவிகளை செய்ய உள்ளோம்,”என்று கூறினார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...