தமிழக அமைச்சர்கள் நாளை காலை 11 மணிக்கு கோவையில் ஆய்வு!

கோவை: கொரோனா தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்து திமுக அமைச்சர்கள் நாளை காலை 11 மணிக்கு கோவையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.



கோவை: கொரோனா தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்து திமுக அமைச்சர்கள் நாளை காலை 11 மணிக்கு கோவையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்புப் பணிக்கான பொறுப்பாளர்களாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நியமிக்கப்பட்டுள்ள இவர்கள் கோவையில் நாளை காலை 11 மணிக்கு ஆவாரம் பாளையத்தில் உள்ள கோ இந்தியா வளாகத்தில் தொழில் துறையினரிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொழில் துறையினரின் பங்களிப்பு மற்றும் தொழில் துறையினர் சார்பில் அரசிடமிருந்து தேவைப்படும் கோரிக்கைகள் முன்வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் அமைச்சர்கள் நாளை மேற்கொள்ளும் கள ஆய்வு கோவை மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...