கோவை: கோவையில் கொரோனாவுக்கு பாதிப்புக்குள்ளான செய்தியாளர் ஒருவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் பகுதியில் தினத்தந்தி குழுமம், மாலை நாளிதழ், மாலை மலர் போன்ற செய்தித்தாள்களில் பகுதிநேர செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் மணிகண்டன் வயது (47). இவருடைய தகப்பனார் நகைச்சுவை நடிகராக இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய தாயார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில்,
மணிகண்டன் அவருடைய தம்பி சந்தோஷ் உடன் தங்கி வந்துள்ளார்.
அவருடைய தம்பி சந்தோஷ் சூலூரில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுவிடுவதில் மணிகண்டனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் ஆக்ஜிசன் கூடிய பெட்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், நேற்று இரவில் இருந்து மணிகண்டன் உடைய தம்பி சந்தோஷ் அவர் செல்போனுக்கு தொடர்பு கொண்டிருந்திருக்கிறார். ஆனால், செல்போன் எடுக்கவில்லை.
அதனால், இது குறித்து இன்று அலுவலகத்தில் தகவல் கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள், இன்று அரசு மருத்துவனையில் சென்று கேட்டபோது நேற்று மாலை 6 மணி அளவில் மணிகண்டன் இறந்துவிட்டதாகவும் அங்குள்ள வார்டில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த செய்தி அந்தப் பகுதியில் உள்ள செய்தியாளர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவியது.
செய்தியாளர் மணிகண்டன் இறந்த செய்தி செய்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரிதாபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.